என் மலர்
நீங்கள் தேடியது "ராட்வீலர்"
- பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இன்றி சட்டவிரோதமாக பிட்புல், ராட்வீலர் நாய்களை வாங்கி வளர்ப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்தது
இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என பீட்டா இந்தியா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு ஒன்றை அமைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






