என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செல்போனை கல்வி முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்- மாணவர்களுக்கு பாலக்கோடு டி.எஸ்.பி.அறிவுரை
  X

  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி.

  செல்போனை கல்வி முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்- மாணவர்களுக்கு பாலக்கோடு டி.எஸ்.பி.அறிவுரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுபானங்களுக்கு அடிமையாகாமல் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.
  • ஆண்ட்ராய்டு செல்போனை கல்வி முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

  காரிமங்கலம்,

  தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

  இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.

  மேலும் மாணவர்கள் போதை பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையாகாமல் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் ஆண்ட்ராய்டு செல்போனை கல்வி முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

  Next Story
  ×