search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையம்புதூர் அரசு ஆஸ்பத்திரியில்   நோயாளிகள், உறவினர்களிடையே  சேட்டை செய்யும் குரங்குகள்
    X

    பாளையம்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள், உறவினர்களிடையே சேட்டை செய்யும் குரங்குகள்

    • பால் பாட்டிலை பறித்து குரங்கு குடிக்கின்றன.
    • குரங்கு அருகில் இருந்த சிறிய கண்ணாடியை எடுத்து தன் முகத்தின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள பாளையம்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மருத்துவமனைக்கு நாள்தோறும் அப்பகுதியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் பெண்கள் பெரியவர்கள் வரை அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகவும் மருத்துவ சோதனைக்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    மருத்துவமனை வளாகத்தில் உள்ள புளிய மரங்களில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கி இருக்கின்றன. மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்களிடம் அவர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கி தின்று அங்கேயே மரங்களில் தங்கி வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் சேட்டை நிறைந்த குரங்கு ஒன்று தன்னுடைய குரங்கு சேட்டையை காட்டியது.மருத்துவமனைக்கு பொதுமக்கள் ஒருவர் எடுத்து வந்த பால் நிறைந்த பாட்டிலை பிடுங்கிய குரங்கு அசாதாரணமாக மூடியைத் திறந்து குடிக்க ஆரம்பித்தது. குரங்கின் வாய் பகுதி மற்றும் முகங்களில் பால் ஒழுக ஒழுக குடித்துக் கொண்டிருந்தது.

    அதனை அடுத்து பாலை முழுவதும் குடித்து முடித்த குரங்கு அருகில் இருந்த சிறிய கண்ணாடியை எடுத்து தன் முகத்தின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.

    கண்ணாடியில் தன் அழகை பார்த்து ரசித்த குரங்கு வெட்கப்பட்டு மீண்டும் மரத்தின் மேலே ஏறிக் கொண்டது.

    இந்த சேட்டை நிறைந்த குரங்கின் செயல்பாடுகள்அப்பகுதியில் இருந்த பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    Next Story
    ×