search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
    X

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

    • மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    2022-23 ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000, 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4000, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000, இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6000, முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.

    மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு 9 முதல் 12ம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000 மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000 மற்றும் முதுகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.6000 வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    2022-23 ம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    மாணவ மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×