search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய விலையில் பவர் டில்லர் வழங்க ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு
    X

    மானிய விலையில் பவர் டில்லர் வழங்க ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு

    • சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 100 பேருக்கு வழங்க ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    அதன் படி தருமபுரி மாவட்டத்திற்கு 70 பேருக்கு பொது பிரிவிற்கும் 30 பேருக்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய பிரிவிற்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும் இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இதில் SC, ST பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில்2022-23 உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார்கார்டு நகல் மற்றும் வங்கி பாஸ்புத்தக நகல் ஆகியவற்றுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்- 04342 296132, அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் உதவிசெயற்பொறியாளர் -04346296077 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×