search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை
    X

    தருமபுரியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

    • இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
    • இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வை யற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 2023-2024 ஆம் ஆண்டு மாணக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளியானது தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியானது 1 முதல் 5 வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கி பயிலும் வகையில் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி பயின்ற ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

    மேலும் இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    மேலும் தொடர்புக்கு தலைமையாசிரியர் (பொ), அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், இலக்கியம்பட்டி தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் 7373773486, 043432-232418 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    எனவே பார்வைதிறன் குறைபாடுடைய மாணவர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பள்ளியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×