search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு மாரியம்மன் கோவிலில் ரூ.5.49 லட்சம் உண்டியல் காணிக்கை
    X

    பாலக்கோடு மாரியம்மன் கோவிலில் ரூ.5.49 லட்சம் உண்டியல் காணிக்கை

    • அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை கோவில் உண்டியலில் செலுத்தினர்.
    • அறநிலைய கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா இந்தாண்டு மார்ச் 6 முதல் 10-ம் தேதி வரை, வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதில் 12 ஊர் கிராம மக்கள் மற்றும் உள்ளூர் வெளியூர், வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை கோவில் உண்டியலில் செலுத்தினர்.

    நேற்று அறநிலைய கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது

    இதில் ரூ.5 லட்சத்து 49ஆயிரத்து 258 ரொக்க பணம் மற்றும் 31 கிராம் தங்கம், 900 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு பாலக்கோடு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. காணிக்கை எண்னும் பணியில் பொதுமக்கள் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×