என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் மாவட்டத்தில் 31 செ.மீ மழை
  X

  கோப்பு படம்

  திண்டுக்கல் மாவட்டத்தில் 31 செ.மீ மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை நேரங்களில் பெய்து வரும் கனமழையினால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
  • மாவட்டத்தில் 31 செ.மீ மழை பெய்துள்ளது.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை நேரங்களில் பெய்து வரும் கனமழையினால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.

  மாவட்டத்தில் 90 சதவீதம் அணைகள் நிரம்பி முழுகொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் குளங்கள் மற்றும் கண்மாய்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நேற்று மாலை திண்டுக்கல்லில் சாரலுடன் தொடங்கிய மழை படிப்படியாக உயர்ந்து கனமழையாக கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

  திண்டுக்கல் 30.6, கொடைக்கானல் 10, பழனி 2, சத்திரப்பட்டி 50.2, நத்தம் 3.5, நிலக்கோட்டை 26.4, வேடசந்தூர் 65, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 64, காமாட்சிபுரம் 48.4, போட்கிளப் 12 மி.மீ என மொத்தம் 312 மி.மீ மழையளவு பதிவானது.

  தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×