search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே மான் தோல் பதுக்கிய ஜோதிடர் உள்பட 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    ஒட்டன்சத்திரம் அருகே மான் தோல் பதுக்கிய ஜோதிடர் உள்பட 3 பேர் கைது

    • ஒட்டன்சத்திரம் அருகே ஜோதிடர் ஒருவர் மான்தோலில் அமர்ந்து குறி சொல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவர்களிடமிருந்து 4 புள்ளிமான் தோல்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கிழக்கு ஆயக்குடி கிராமம் பி.கே.என்.புதூரில் உள்ள முருகபகவான் கோவிலில் ஜோதிடர் தங்கராஜ் என்பவர் மான்தோலில் அமர்ந்து குறி சொல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட வனஅலுவலர் பிரபு உத்தரவின்பேரில் ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் செந்தில், வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்பாபு, பிரேம்நாத், ஜெயசீலன் உள்ளிட்டோர் அந்த கோவிலுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தங்கராஜ் மான் தோலில் அமர்ந்து குறி சொல்லியது தெரியவந்தது. இதனையடுத்து தங்கராஜ்(54), மற்றும் அவரது உதவியாளர்களான காவலபட்டிபுதூரை சேர்ந்த ஆறுமுகம்(40), தண்டபாணி(67) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 4 புள்ளிமான் தோல்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட வனஅலுவலர் உத்தரவின்பேரில் அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.75ஆயிரம் அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×