search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    சென்னையில் 7-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்

    கடந்த 6 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இதற்கிடையில், விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா 9.50 ரூபாயும், 7.00 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால், கடந்த 6 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×