search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    செஞ்சியில் லாரி-பஸ்-கார் மோதல்

    லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் வலது பக்கம் திரும்பியதால் எதிரில் வந்த காரின் பக்கவாட்டில் பஸ் மோதி கார் சேதமடைந்தது.
    செஞ்சி:

    செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக லாரியில் செங்கற்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டன. கற்களை கீழே இறக்கி விட்டு மீண்டும் லாரியை திருப்புவதற்காக லாரி டிரைவர் சாலையின் குறுக்காக லாரியை எடுத்துச் சென்றார். லாரி ஓரமாக சென்ற பிறகு அந்த வழியாக வந்த பஸ் லாரி ஓரமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு பஸ்சை ஓட்டி வந்தார்.

    அப்போது லாரி டிரைவர் திடீரென லாரியை பின்பக்கம் எடுத்ததால் பஸ்சின் பக்கவாட்டில் லாரி பின்பக்கம் மோதியது. லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் வலது பக்கம் திரும்பியதால் எதிரில் வந்த காரின் பக்கவாட்டில் பஸ் மோதி கார் சேதமடைந்தது.

    அப்போது திடீரென டமால் என்ற சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பரபரப்படைந்தனர், இதில் பஸ் மற்றும் கார் லேசான சேதம் அடைந்தது. லாரியின் பின்பக்கமும் லேசான சேதம் அடைந்தது. ஆனால் இதில் 3 வாகனங்களில் சென்றவர்கள் யாருக்கும் எந்தவித விபத்தும் இன்றி உயிர் தப்பினார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பலத்த கூட்டம் கூடி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து செஞ்சி போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×