என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எருது விடும் விழா
  X
  எருது விடும் விழா

  ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சியில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ். கே. சதீஷ் குமார் தலைமை தாங்கினார். 

  ஊர் கவுண்டர்கள், பெரியோர்கள் முன்னிலை வகித்தனர். வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி, வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

  கிருஷ்ணகிரி, நாற்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 350 காளைகள் போட்டியில் பங்கேற்றன. 

  முன்னதாக போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு எருது விடும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 

  அதிக வேகத்தில் இலக்கை தொட்ட எருதுகளுக்கு மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் காளைகள் தடுக்க முயன்ற 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

  மேலும் காயம் ஏற்பட்டவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
  சோமநாயக்கன்பட்டி அப்பகுதியை சார்ந்த
  Next Story
  ×