search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்பெட்ரோல் விற்பனை நிலையத்தை  அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
    X
    கிருஷ்ணகிரியில்பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரியில் பெட்ரோல் விற்பனை நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

    கிருஷ்ணகிரியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரெசன் சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலைய தொடக்க விழா நடந்தது. 

    இந்த விழாவிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் வசந்தகுமார், ரீடெயில் சேல்ஸ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் ஆதவன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர் குப்புசாமி, துணை பதிவாளர் (பால்வளம்) கோபி, நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×