என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாலாற்று வெள்ளத்தில் மீண்டும் சேதமடைந்த தரைப்பாலம்.
  X
  பாலாற்று வெள்ளத்தில் மீண்டும் சேதமடைந்த தரைப்பாலம்.

  ஆம்பூர் அருகே மாதனூர்-குடியாத்தம் தரைபாலம் மீண்டும் பாலாற்று வெள்ளத்தில் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் அருகே மாதனூர்-குடியாத்தம் தரைபாலம் மீண்டும் பாலாற்று வெள்ளத்தில் சேதமடைந்தது.
  ஆம்பூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் உள்ளி வழியாக பாலாற்றில் குடியாத்தம் செல்வதற்காக கடந்தாண்டு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

  இந்த பாலம் கடந்த 19-ம் தேதி அன்று திடீர் மழை காரணமாக பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வேலூர் மாநகரம் ராணிப்பேட்டை நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் பைப்புகள் சேதமாகியது.

  இது சம்பந்தமாக திருப்பத்தூர், வேலூர் கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் அரசு அதிகாரிகள் பாலாற்றை பார்வையிட்டு மழை வெள்ளத்தால் பாலாற்றில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

  கடந்த 3 நாட்களாக இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் செல்ல ஒரு சிறிய நடைபாதை அமைக்கப்பட்டது. அதுவும் இன்று காலை பாலாற்று வெள்ளத்தால் சேதம். எற்பட்டது அந்த சிறு நடை பாதையும் இல்லை.

  இதனால் குடியாத்தம் மாதனூர் ஒடுகத்தூர் ஆகிய பகுதி மக்கள் வேலூர் திருப்பத்தூர் ஆகிய பகுதிக்கு பல்வேறு வகையான பயணங்களுக்கு வந்து போக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  விரைவாக மாதனூர் உள்ளி பாலாற்றை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  Next Story
  ×