என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  திருவண்ணாமலை கோவிலுக்கு புதிதாக யானை வர உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக யானை வர உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

  இக்கோவிலில் ருக்கு யானை இருந்தது. அந்த யானை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உடல் நிலை சரியில்லாமல் இறந்தது. அந்த யானையின் நினைவாக கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் எதிரில் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. 

  அதைதொடர்ந்து கோவிலுக்கு புதியதாக யானை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்குவதற்காக பல்வேறு உபயதாரர்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

  இந்த நிலையில் நேற்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் அருணாசலேஸ்வரர்  கோவிலுக்கு விரைவில் யானை வர உள்ளது என்று வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

  இது குறித்து கோவில் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

  அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வாங்கி தருவதற்கு உபயதாரர்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர். வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ பதிவு குறித்து உறுதியான தகவல் ஏதும் தற்போது கிடையாது. ஆனால் யானை வாங்குவதற்காக சில உபயதாரர்கள் அசாம், அந்தமானிற்கு சென்று உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

  உறுதியான தகவல் கிடைத்ததும் முறையாக அறிவிக்கப்படும். கோவிலுக்கு உபயதாரர்கள் யானை வழங்குவதற்கு அறநிலையத்துறையில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்றார்.
  Next Story
  ×