search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநாட்டில் கலந்து  கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    மாநாட்டில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் தொழிற்சங்க மாநாடு

    தருமபுரியில் தொழிற்சங்க மாநாடு நடைபெற்றது.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட எச்.எம்.எஸ்.  தொழிற்சங்க மாவட்ட மாநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
    மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமை வகித்தார். பேரவை அமைப்புச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். நிர்வாகிகள் கணேசன், பால கிருஷ்ணன், மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். 
    மாநில செயல் தலைவர்  சுப்பிரமணியபிள்ளை,  நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 
    இதில் அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர், மாநில தலைவர் சுப்பிரமணி யன், கட்டுமான அமைப்பு சாரா பேரவை பொதுச் செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில், தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்த தமிழக முதல்வர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு இம்மாநாட்டில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தொழிலாளர் சட்டத் தொகுப்பினை நான்கையும் ஒன்றிய அரசுகைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 
    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜவுளித் தொழிலை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறப்பை கட்டுப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×