search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காம்புலியூர் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தப்படம். திருக்காம்புலியூர்
    X
    திருக்காம்புலியூர் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தப்படம். திருக்காம்புலியூர்

    ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளை கண்டறிய சிறப்பு முகாம்

    ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளை கண்டறிய சிறப்பு முகாம் ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளை கண்டறிய சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    கரூர்:


    கரூர் திருக்காம்புலியூர் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசும் போது,

     கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்) தொடங்கப்பட்டது.
    ஒரு மருத்துவர் அடங்கிய 3 பேர் கொண்ட 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    முகாமை பொருத்தவரை குழந்தைகள் வயதிற்கேற்ப எடை, உயரம்  ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்படும் அவ்வாறு கண்டறியப்பட்ட குறைபாடுள்ள குழந்தைகளை ஊட்டச்சத்தினால் குறைபாடா? அல்லது வேறு ஏதாவது மருத்துவ காரணங்களால்  குறைபாடா? என்பதுக் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மருத்துவக் க ல்லூரிக்கு பரிந்துரைக்கப்படும்.

    அவ்வாறு கண்டறியப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து தலைமை இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முகாம் வரும் ஜூன் 21ம் தேதி வரை நடைபெறும். மேலும் குழந்தைகளை ஆய்வு மேற்கொள்ளும் பொழுது அவர்களின் தாயார் ஆய்வு மேற்கொள்ளும் இடத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றார்.
    Next Story
    ×