search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீரழிந்த நிலையில் காணப்படும் பெருநீர்குளம்
    X
    சீரழிந்த நிலையில் காணப்படும் பெருநீர்குளம்

    தக்கலை அருகே சுகாதார சீரழிவால் மாசுபடும் பெருநீர்குளம்

    தக்கலை அருகே பெருநீர் குளம் தண்ணீர் தெரியாத அளவுக்கு புற்கள் மண்டிக்கிடக்கின்றன. கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சமூக அமைப்புகள் கோரிக்கை.
    தக்கலை:

    தக்கலை அருகே பெருநீர் குளம் உள்ளது. இதை நுள்ளிகுளம் என்றும் அழைப்பார்கள். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு உடைய இந்த குளம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்க ணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய இந்த குளத்தின் நீர் விவசா யிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. 

    மேலும் ஆடு மாடுகளை குளிப்பாட்டவும், இளை ஞர்கள் நீச்சலடித்து குளிக்கும் அளவுக்கு காணப்பட்டது. தற்போது பல ஆண்டு களாக இந்தக் குளம் குற்றுச்செடிகள், பாசிகள் நிறைந்து விஷசந்து க்களின் உறைவிடமாக மாறியது. தண்ணீர் தெரியாத அளவுக்கு புற்கள் மண்டிக்கிடக்கின்றன. 

    மேலும் ஆடு, மாடுகள் மற்றும் மக்கள் இறங்கி குளிக்கும் பகுதியையொட்டி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சுடுகாடு அறையும் கட்டப்பட்டது.
    இதனால் குளத்தின் மறுகால் பகுதி அடைக்கப்ப ட்டது. சுடுகாடு அறை கட்டிய நாள் முதல் பொது மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாமல் வருத்தப்பட்டனர். இதனால் குளம் நாளுக்குநாள் சீரழிய தொடங்கியது.

    மேலும் சுடுகாட்டில் எரிக்கப்படும் மனித உடல்களை சாம்பலான பின் எரியாத எலும்புகள் உள்பட அனைத்து கழிவுகளையும் குளத்தில் போட்டு விடுகின்றனர். இதனால் தண்ணீர் சுகாதார சீர்கேடு அடைகிறது. 

    மேலும் சுடுகாட்டை ஒட்டியுள்ள பகுதியில் ஆடு மாடுகள் இறக்கும் போது தண்ணீரில் கிடக்கும் எலும்புத்துண்டுகள் காலில் தட்டுப்பட மக்கள் அலறியபடி ஓடுகின்றனர்.

    ஆகவே வருமுன் காப்பது போல் தண்ணீர் சுகாதார சீர்கேடு அடையா மலிருக்கவும் பொதுமக்கள் தண்ணீரை பயன் படுத்தவும் சம்மந்தப்பட்டவர்கள் மனித கழிவுகளை குளத்தில் வீசி எறிவதை தவிர்க்க வேண்டும். 

    மேலும் திருவிதாங்கோடு பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு சுடுகாட்டை வேறு இடத்தில் மாற்றவோ அல்லது கழிவுகளை தண்ணீரில் போடுவதை தவிர்க்க சிசிடிவி கேமராவை இணைத்து கண்காணிக்க வேண்டும்.
     
    மேலும் ஆடுமாடுகளை இறக்கி குளிப்பாட்டுவதற்கு ஏற்றவாறு படித்துறை ஒன்று அமைக்க வேண்டு மென சமூக அமைப்புகளான தடயங்கள் பண்பாட்டு கலை கழகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×