search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    filephoto
    X
    filephoto

    ஆசிரியர்களுக்கு 2 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை

    ஆசிரியர்களுக்கு 2 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.,
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கவுன்சிலிங் மூலம் பணிமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து அச்சங்க மாநில துணை செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் தொடக்க கல்வி துறை இயக்குநர் மற்றும கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2012-22ம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு கடந்த பிப்ரவரி-2022ல் நடந்தது. 

    இந்த கலந்தாய்வில் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த 26 ஆசிரியர்களக்கு ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டு கடந்த மார்ச் 1ம்தேதி பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
    ஆனால் அவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. 

    இதனால் வீட்டு வாடகை செலுத்தமுடியவில்லை. குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு மற்றும்  அன்றாடைய அத்தியவாசிய பொருட்கள் வழங்க முடியாமலும், வீட்டு மற்றும் வாகன கடன் மாதத்தவணை செலுத்தமுடியாமலும் தவிர்த்து வருகின்றனர்.

    இதைப்போலவே பணிநிரவல் மற்றும் மாறுதல் பெற்று உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் 2 மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. 

    எனவே 26 ஆசிரியர்களுக்கும் 2 மாத நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×