என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  கிருஷ்ணகிரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி புதுப்பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி புதுப்பெண் பலியானார்.
  மத்தூர்,

  கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகேயுள்ள வீரமலையை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சங்கீத (வயது24). கணவன், மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டினம் வந்தனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

  சீகன்கொட்டாய்  அருகே முன்னால் சென்ற அரசு பஸ்சை வேலு முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சங்கீதா ரோட்டில் விழுந்தார். இதில் அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கீதா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். 

  இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  இறந்து போன சங்கீதாவுக்கு  திருமணமாகி 6 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  கிருஷ்ணகிரி செய்திகள், 

  Next Story
  ×