என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீமிதி திருவிழா நடைபெற்ற ேபாது எடுத்தப்படம்
  X
  தீமிதி திருவிழா நடைபெற்ற ேபாது எடுத்தப்படம்

  மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
  திருச்சி :

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி. இங்குள்ள  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் 30ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

  14ஆம் தேதி அம்மன் பொங்கல் நிகழ்ச்சியும் 19ஆம் தேதி அக்னிச்சட்டி, 20ஆம் தேதி விளக்குபூஜை,21ந்தேதி காலை  பால்குடம் மாலை அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.

  இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா விமரிசையாக முடிவுற்றது.திருவிழாவையொட்டி கடந்த 10 நாட்களும் தினமும் இரவு வேளையில் பல்வேறு  இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது 

  விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி தலைவர்  ரஞ்சித்குமார் அண்ணாதுரை தலைமையிலான விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×