search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் சி.நா.மி. உபயதுல்லா தமிழ்மொழி மற்றும் சமுதாயத் தொண்டர்களுக்கு பட்டம் வழங்கினார்.
    X
    முன்னாள் அமைச்சர் சி.நா.மி. உபயதுல்லா தமிழ்மொழி மற்றும் சமுதாயத் தொண்டர்களுக்கு பட்டம் வழங்கினார்.

    தமிழ்ப்பேரவை மாநாடு

    திருவையாறில் தமிழ்ப்பேரவை மாநாடு நடந்தது.
    திருவையாறு:

    திருவையாறு தமிழ்ப்பே ரவையின் 58 -வது ஆண்டு திருக்குறள் மாநாடு நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.ரெத்தினசாமி, அம்ம ன்பேட்டை இராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரம நிர்வாகி சொரூபானந்த மகராஜ் ஆகியோர் குத்துவி ளக்கு ஏற்றி, மாநாட்டைத் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்ப் பேரவை பொருளாளர் சரபோஜி அறிமுக உரையாற்றினார். செயலாளர் துரை.ராமலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். பின்னர், வட்டாட்சியர் (ஓய்வு) கலியமூர்த்தி தலைமையில் கருத்தரங்கமும், ஆசிரிய்ர் மருதமுத்து தலைமையில் கவியரங்கமும் நடந்தது.

    தமிழறிஞரும் பேரவைப் பொதுச்செயலாளருமான உறுதிமொழி கோவிந்தராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. தமிழ்ப்பேரவை தலைவர் ஆர்.எம்.ராஜ் தலைமையிலும், பொதுச்செயலாளர் தொன் போஸ்கோ, விளாங்குடி மகாதேவன், திருப்பூந்துருத்தி பள்ளி கல்வி வளர்ச்சிக்குழுத் தலைவர் உஜ்வல்தீப் காடேராவ் ஆகியோர் முன்னிலையிலும் தமிழ் மொழி மற்றும் சமுதாயத் தொண்டர்கள் 6 பேருக்கு முன்னாள் அமைச்சர் சி.நா.மி. உபயதுல்லா, குடந்தை மேயர் சரவணன், முன்னால் ஸ்டேட் பாங்க் இயக்குநர் லோகநாதன் மற்றும் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் பட்டமளித்து பாராட்டு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பாடத்தில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் செயலாளர் ராஜன்பாபு,இணைச் செயலாளர் பாரி, கவிஞர் மாணிக்கம், முத்து.மணிவ ண்ணன், வக்கீல் அருள்பிரகாஷ், முனைவர் ரஹ்மத் பீவி, ஆடிட்டர் (ஓய்வு) சத்தியமூர்த்தி, கரும்பாயிரம் மற்றும் சிங்காரவேல் ஆகியோர் கலந்துகொண்டார்கள். விழா நிறைவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×