என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஸ்ரீநேத்திர விநாயகருக்கு மண்டலா–பிஷேகம் நடை பெற்ற போது எடுத்த படம்.
  X
  ஸ்ரீநேத்திர விநாயகருக்கு மண்டலா–பிஷேகம் நடை பெற்ற போது எடுத்த படம்.

  கோவில்களில் மண்டலாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்களில் மண்டலாபிஷேகம்
  பெரம்பலூர்:

  பெரம்பலூர்,   ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதஸ்ரீசுப்ரமணிய சுவாமிகோவிலில், மண்டலாபிஷேகத்தையொட்டி, 108 சங்காபிஷேகம் நடந்தது.

  பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு இந்திரா நகரில், எழுந்தருளியுள்ள ஸ்ரீநேத்திரவிநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும்    அரசுவேம்பு திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி நடந்தது.

  இதைத்தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது.

  இதைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது.  பின்னர் மாலை 5 மணியளவில் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.  விழாவில், பம்பை மங்கல வாத்தியம், கருப்புசாமி, அம்மன் ஆகிய சுவாமி வேடமணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடை பெற்றது.

  Next Story
  ×