search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1008 திருவிளக்கு பூஜை
    X
    1008 திருவிளக்கு பூஜை

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

    கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினார்கள்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு வைகாசிமாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. 

    இதையொட்டி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடிஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினார்கள். 

    பின்னர் அவர்கள் அங்குஇருந்து ஊர்வல மாக புறப்பட்டு விவேகானந்த புரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதிதெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலைசென்று அடைந்தார்கள்.அங்கு5 மணிக்கு பஜனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5-30 மணிக்கு பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இதில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, விவேகா னந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். 

    இதில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அதன்பிறகு 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. 

    கோவிலின் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து இந்த திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள். இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்ட ங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×