search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓசூர் அருகே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட கிராமம்- மருத்துவ முகாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    ஓசூர் அருகே வயிற்றுப்போக்கால் ஒரு கிராமமே பாதிக்க ப்பட்டுள்ள நிலையில், சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சித்தனப்பள்ளி கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், கடந்த சில நாட்களாக வயிற்றுபோக்கு, உடல்வலி, சளி, இருமல் போன்றவற்றால் கடும் அவதிப்பட்டு வரு கின்றனர். ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 3 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியினர் தெரி வித்துள்ளனர்.

    இதனால் வேலைக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஒரு சிலர், ஓசூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தினமும் சிகிச்சைக்கு சென்று திரும்புகின்றனர். மேலும் சிலர், தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து, கிராம மக்கள் கூறும்போது, போர்வெல் தண்ணீர் மற்றும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீரை கலந்து மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர். அதனால் அதை குடிக்கும் மக்களுக்கு, கடந்த சில நாட்களாக வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளன. 

    எனவே, மாவட்ட நிர்வாகம் காரணத்தை கண்டறிந்து, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×