என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் பண மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல லட்சம் ேமாசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தரக்கோரி எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து கடலூர் மாவட்ம், திட்டக்குடி தாலுகா, தச்சூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பழனிவேல்(44) என்பவர் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: 

  நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன், நான் பெரம்பலூர் நான்குரோடு சாலை பகுதியில் மரதச்சு தொழில் செய்து வருகிறேன். தொழில் மூலம் ஈட்டிய வருமானத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை நான் குன்னம் தாலுகா, திருமாந்துரையை சரவணன் மனைவி மீனா, அவரது மகள் சந்தியா, மருமகன் சுரேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்த கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தி வந்த ஏலச்சீட்டில் ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம், ரூ. 5 லட்சம் ஆகிய மூன்று வகையான சீட்டில் சேர்ந்தேன்.  

  இந்த சீட்டிற்கு மாதாமாதம் பணம் செலுத்தி வந்தேன். இதன்படி ரூ 6. லட்சத்து 63 ஆயிரத்து 300 கட்டினேன். மேற்கண்ட மீனா, சந்தியா ஆகியோர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி 20 மாதம் கழித்து மேலே உள்ள பணம் இரட்டிப்பாக ரூ.18 லட்சம் கிடைக்கும் என கூறினர். ஆனால் நான் கட்டிய பணமே போதும், பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம்தேதி தருகிறேன் என கூறினர்.

  இதனிடையே சரவணன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்ேததி இறந்துவிட்டார். இதையடுத்து பிப்ரவரி 27-ந்தேதி நான் சரவணன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மீனாவிடம் சீட்டு பணத்தை கேட்டதற்கு பணம் தரமுடியாது எனவும், மீனாவும்,  அவரது உறவினர்கள் என 6 பேர் ஒன்று சேர்ந்து இறந்து போன சரவணனிடம் போய் கேள் என கூறி தகாத வார்த்தை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

  இதனால் என்னை ஏமாற்றி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுதரக்கோரி பெரம்பலூர் எஸ்பியிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந்தேதி புகார் மனு அளித்தேன். 

  அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எதிரிகளையும், என்னையும் அழைத்து விசாரணை செய்தபோது கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம்தேதி முழுத்தொகையும் தருவதாக எழுதி கொடுத்தார்கள். ஆனால் அதன்படி பணத்தை தரவில்லை. எதிரியிடம் கேட்டால் பணம் தரமுடியாது என கூறுகின்றனர், போலீசாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

  ஆகையால் ஏலச்சீட்டு நடத்தி பணமோசடி செய்த மீனா உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தார். மனுவினை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
  Next Story
  ×