search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர் ஹாரன்கள்
    X
    ஏர் ஹாரன்கள்

    பொதுமக்களை அதிரச்செய்யும் ஏர் ஹாரன்கள்

    ராஜபாளையத்தில் ஏர் ஹாரன்கள் ஒலிக் செய்யும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? மக்கள் எதிர்பார்ப்பு.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுமார் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சி ஆகும்.தொழில் நிமித்தமாக வந்து செல்லும் வெளிநபர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்தை தாண்டும்.

    நூற்பாலை, விசைத்தறி கூடங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் என பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.  கனரக வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்லும் நகரமாக ராஜபாளையம் வளர்ச்சி அடைந்து வருகிறது.முக்கியத்துவம் வாய்ந்த ராஜபாளையத்திற்கு பைபாஸ் சாலை வசதி, பைபாஸ் சர்ஜரி நோயாளி போன்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 

    மக்கள் மேலும் மேலும் அல்லல்படும் வகையில் கடந்த ஆட்சியில் சத்திரப்பட்டிரோடு மேம்பால பணிகள்,தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம்,பாதாள சாக்கடை திட்டம் என 3 திட்டப்பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டு சாலையை தோண்டுகிறார்கள்... தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

    சத்திரப்பட்டிரோடு தடைபட்ட நிலையில் தென்காசிசாலை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது அதிலும்தாமிரபரணி,  பாதாள சாக்கடைக்கு என இரவு நேர ங்களில் மட்டும் குழிகள் தோண்டப்பட்டு அவசரகதியில் மூடி மறைக்கப்படுகின்றன். 

    ஒரு திரைப்படத்தில் வடிவேல் கூறும் திங்கவும்,கழுவவும் ஒரு கையை தான் பயன்படுத்த வேண்டியதுள்ளது என அங்கலாய்ப்பதை போல நகரத்தை விட்டு வெளியே செல்லவும்,உள்ளே வரவும் ஒரே ரோடான தென்காசிமெயின் ரோடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.இரவில் தோண்டப்படும் குழிகளில் தூசி கிளம்பி ஊட்டி மேகத்தால் மூடப்பட்டது போல ராஜபாளையம் தூசியால் மூடப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

    தனியார் பள்ளிகள்,தனியார் நூற்பாலைகளுக்கென பஸ்,வேன்கள் உள்ளன.இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும்
    கொத்தனார்,நூற்பாலை வேலைக்கு செல்பவர்கள் காலத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஒரே ரோட்டில் வந்து செல்லும் வாகனங்கள் காதை செவிடாக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பானை (ஏர் ஹாரன்கள்) கதற விடுகிறார்கள்.

    தொடர்ச்சியாக ஹாரன் அடித்தால் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை ராஜபாளையத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது.காந்திசிலை ரவுண்டானா அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் ஹாரன் சத்தம் கேட்டு திடுக்கிடுகிறார்கள்.

    போக்குவரத்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கமுன்வர வேண்டும். ஊதுகிற அபாய சங்கை ஊதிவிட்டோம்.போக்கு வரத்து காவல்துறை அதிகாரிகள் காதில் விழுகிறதா?பொறுத்திருந்து பார்ப்போம்.
    Next Story
    ×