என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பாலக்கோடு அருகே வனத்துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை
பாலக்கோடு அருகே கேமரா மூலம் கண்காணித்தும் வனத்துறையினரிடம் சிக்காமல் சிறுத்தை டிமிக்கி கொடுத்து வருகிறது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம். பாலக்கோடு அருகே ஏரனஹள்ளி பகுதியில் சமீபத்தில் வீ்ட்டில் வளர்க்கப்பட்ட கோழி ஒன்றை சிறுத்தை தூக்கி சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். ஆனாலும் சிறுத்தை கிராமத்திற்குள் தொடர்ந்து நடமாடி வருகிறது.
இதையடுத்து ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்து அதன்படி கடந்த சில தினங்களாக கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினரின் கண்ணில் படாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.
இதனால் வேறு பகுதிக்கு சிறுத்தை சென்று விட்டதா?அல்லது இதே பகுதியில் எங்காவது பதுங்கி உள்ளதா? என்ற குழப்பம் வனத்துறையினருக்கு ஏற்பட்டு ள்ளது. இதனால் மக்கள் பீதி இருந்து வருகின்றனர்.
Next Story