என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி இருக்கும் காட்சி.
  X
  விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி இருக்கும் காட்சி.

  தருமபுரி அருகே லாரி-கார் மோதல்: தொழிலதிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதி தொழிலதிபர் பலியானார்.
  தருமபுரி,

  தெலுங்கானா மாநிலம், ஆர்.ஆர். மாவட்டம் ஹேமாநகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு  அவிலா என்கிற மகள் உள்ளது.

  இந்த நிலையில் சுதாகர் தனது குடும்பத்துடன் காரில்  கொடைக்கானலுக்கு புறப்பட்டு வந்தார். காரை கல்யாணியின் தோழியான மகாலட்சுமி என்பவர் ஒட்டி வந்தார். 
  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மேம்பாலம் அருகே இன்று அதிகாலை கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

  இந்த விபத்தில் முன்சீட்டில் அமர்ந்து இருந்த சுதாகர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த மகாலட்சுமி படுகாயம் அடைந்தார். 
  இந்த விபத்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

  விபத்தில் பலியான சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 
  படுகாயமடைந்த மகாலட்சுமியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். 

  அதிர்ஷ்ட வசமாக சுதாகரின் மனைவி கல்யாணியும் அவர்களது மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.  இந்த விபத்து குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  Next Story
  ×