என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த கழிவறை சுவரை படத்தில் காணலாம்.
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறையில் உடைந்த சுவர்கள் அகற்றம்
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறையில் உடைந்த சுவர்கள் அகற்றப்பட்டன.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நல்லம்பள்ளி பகுதியில் பழைய கட்டிடங்களில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்திற்காக ரூ.2.61 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடமும் முடிக்கப்பட்டு 2019ம் ஆண்டு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் ஆதார் மையம் உள்ளிட்ட அலுவலகங்களும் இயங்கி வருவதால் தினந்தோறும் நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பொதுமக்கள் வசதிக்காக தாலுகா அலுவலகத்திலேயே பொதுமக்கள் பயன்படுத்துவதாக தனித்தனியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கழிவறைகள் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையின் சுவர்கள் இடிந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுவதற்கு தயாராக இருந்தது.
இதுகுறித்து செய்தியை மாலைமலர் நாளிதழில் வெளியிட ப்பட்டது. அதன் எதிரொலியாக அபாயகரமாக இருந்த கழிவறையின் சுவர்களை உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்புகள் ஏற்படும் முன்னரே தக்க சமயத்தில் செய்தியின் மூலம் உடைந்த சுவர்கள் அகற்றப்ப ட்டு கழிவறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
Next Story