என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்
  X
  குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்

  கல்குவாரி விபத்து - தேடப்பட்டு வந்த ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது.

  அப்போது மீட்புப் பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறுகையில், கல்குவாரி விபத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

  இந்நிலையில், நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

  திசையன்விளையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×