search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்து
    X
    முத்து

    பாலக்கோடு அருகே முயல் வேட்டைக்கு சென்ற தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலி

    முயல் வேட்டைக்கு சென்றதொழிலாளி மின்வேலியில் சிக்கி பலியானார்.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மலையோரங்களில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களது விளைநிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் சேதம் ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை சுற்றி மின்வேலிகள் அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். இதனால் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்ப டுத்துவது மிகவும் குறைந்தது. ஆனால் இந்த மின்வேலியால் பல வனவிலங்குகள் மற்றும் மனிதர்களும் உயிரிழக்கிறார்கள்.

    கடந்த  13-ந்தேதி அன்று விவசாய விளைநிலங்களை சுற்றி அமைத்துள்ள மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து விளைநிலத்தில் உரிமையாளரை கைது செய்தனர். இதையடுத்து விளைநிலங்களை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைக்க கூடாது என வனத்துறையினர் ெதரிவித்தனர். ஆனால் இதனை பல விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் மாரண்டஅள்ளி அருகே செங்கன் பசுவந்தலாவ் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  நரசிம்மன் (வயது40). இவர் சக நண்பர்களுடன் நேற்றிரவு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.

    அப்போது செங்கன் பசவன் தலாவ் அருகே  முத்து என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், தக்காளி, வாழை உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகிறார். 
    இரவு நேரங்களில் காட்டு பன்றி, எலி, பாம்பு உள்ளி ட்டவை களிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.
    முயல் வேட்டையாட சென்ற நரசிம்மன் எதிர்பாரத விதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர்.மேலும் விவசாயி முத்துவை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் மின்வேலியில் சிக்கி யானை இறந்த சோகம் மறைவதற்குள். மீண்டும் மின் வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×