search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் விழா
    X
    குளச்சல் செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் விழா

    குளச்சல் செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் விழா

    குளச்சல் செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் விழா நடந்தது.
    கன்னியாகுமரி:

    குளச்சல் செக்காலத்தெரு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தீபாராதனையும், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

    2-ம் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, நையாண்டி மேளமும் நடந்தது. 9.30 மணிக்கு கடலில் இருந்து அம்மனுக்கு புதுநீர் எடுத்து வருதல், 10.30 மணிக்கு அதிசய நாகர் ஆலயத்திலிருந்து நேர்ச்சை பால்குடம், சந்தனக்குடம் எடுத்து வருதல், 11.30-க்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு குடி அழைப்பு, இரவு 9 மணிக்கு தீபாராதனை, 11 மணிக்கு அம்மனுக்கு முத்து சொரிதல் மற்றும் ஒடுக்கு பூஜை நடந்தது. 

    3-ம் நாள் இன்று காலை 9 மணிக்கு திருவாசக முற்றோதல், 11 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் 1மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 3 மணிக்கு வாழிபாடுதல், மாலை 6 மணிக்கு சமய வகுப்பு பரிசு வழங்கல், 6.30 மணிக்கு இசை நாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×