என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  இரணியல் அருகே லாரி மோதி பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரணியல் அருகே லாரி மோதி பெண் பலியானது எப்படி? - டிரைவர் கைது
  கன்னியாகுமரி:

  இரணியல் அருகே உள்ள பரசேரியை சேர்ந்தவர் பத்மதாஸ் (வயது 36). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தர்ஷினி (33). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

  தர்ஷினி நேற்று மாலை பேயன்குழியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று பணம் எடுத்துள்ளார்.பின்னர் பரசேரி நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். நுள்ளிவிளை குருசடி அருகில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

  இதில் தர்ஷினி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் தர்ஷினி தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். அக்கம் பக்கத்தினர் லாரியை துரத்திச் சென்று தோட்டியோட்டில் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் வெட்டூர்னிமடம் பள்ளிவிளையை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்ப வரை கைது செய்தனர். 

  பிணமாக கிடந்த தர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வை த்தனர். தர்ஷினி பலியான தகவல் வெளிநாட்டில் உள்ள அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டது.

  விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதள ங்களில் பரவி வருகிறது. ஸ்கூட்டரில் செல்லும் தர்ஷினி சாலையில் கிடந்த பள்ளத்தில் ஸ்கூட்டரை இறக்காமல் இருக்க ஒரு புறத்தில் திருப்புகிறார். அப்போது பின்னால் வந்த லாரி தர்ஷினி மீது மோதி உள்ளது. 

  கீழே விழுந்த தர்ஷினி மீது லாரியின் பின்சக்கரம் ஏறி பலியாகி இருக்கும் வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
  Next Story
  ×