என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆம்பூர் அருகே பைக் மோதி வாலிபர் பலி
ஆம்பூர் அருகே பைக் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:
ஆம்பூர் வடபுதுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்த திலிப் குமார் வயது (27) கூலி தொழிலாளி நேற்று இரவு 12 மணியளவில் நண்பர்களுடன் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவுக்கு சென்று பைக்கில் ஊருக்கு திரும்பி வந்தனர்.
கிழ்முருங்கை நெடுஞ்சாலையில் பைக் விபத்துக்குள்ளாகி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே திலிப்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
Next Story