என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  கரூர் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடை பெற்றது.
  கரூர் மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அபய பிரதான ரங்கநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 

  இதையொட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீதேவி, பூதேவி சமேதராக  அபய பிரதான ரங்நாதர் உற்சவர் தேரில் வந்து எழுந்தருளினர் 

   தேரோட்டத்தை உதவி ஆணையர் தா.நந்தகுமார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

  தேர் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் தேரடியை வந்தடைந்தது. பின்னர், சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

  வரும் மே 17ம் தேதி ஊஞ்சல் உற்சவம், மே 18ம் தேதி புஷ்பயாகத்துடன் விழாவுடன் நிகழ்ச்சி  நிறைவடைகிறது.

  Next Story
  ×