என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  பழனியில் பெண்ணிடம் நகை பறிப்பு- 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனியில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பழனி:

  பழனி அடிவாரம் இடும்பன் கோவில் பகுதியை சேர்ந்த தங்கவேலு மனைவி சின்னபொண்ணு(35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகபுரத்தில் இருந்து இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி சாலையில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

  இதுகுறித்து டி.எஸ்.பி சத்தியராஜ் அறிவுறுத்தலின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளின் உருவத்தை அடையாளம் கண்டுபிடித்தனர்.

  இதில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது மதுரை கரும்பாலையை சேர்ந்த பாண்டி மகன் தனபாண்டி(22), பழங்காநத்தத்தை சேர்ந்த முத்துகுமார் மகன் விக்னேஷ்வரன்(21), பழனி சிவகிரிபட்டியை சேர்ந்த பாண்டி மகன் ரஞ்சித்(25) என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

  கைதான தனபாண்டி மீது மதுரையில் 10க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×