search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமலாக்க  பிரிவு
    X
    அமலாக்க பிரிவு

    கடலோர அமலாக்கப் பிரிவு தொடக்கம்

    மீனவா்கள் விதிமீறலை கண்காணிக்க கடலோர அமலாக்க பிரிவு தொடக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறைதுணை இயக்குநா் காத்தவராயன் கூறியதாவது:- 

    மாவட்ட மீன்வளத்து றையின் மூலம் கடந்த 1983 -ம் ஆண்டு தமிழ்நாடு கடலோர ஒழுங்காற்று சட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி கடல் மீன்பி டிப்பில் விதிகளை மீறும் மீனவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 

    அவா்கள் கடலுக்கு நேரடியாகச் சென்று மீனவர்களை கண்காணித்து அபராதம் விதித்தும் வந்தனா். ஆனால், மீனவா்கள் அதிகாரிகளை அலட்சியப்படுத்தும் போக்கும், பயமில்லாத நிலையும் அதிகரித்தது.

    இதன்காரணமாக மீன்வளத்துறையினருக்கு உதவும் வகையில் கடலோர சட்ட அமலாக்கப்பிரிவு செயல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை சீருடையுடன் மீன்வளத்துறை இணை இயக்குநா், உதவி இயக்குநா்களின் கீழ் செயல்படும் கடலோர சட்ட அமலாக்கப் பிரிவினா் தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்டார மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்துக்கும் சோ்த்து அலுவலக எழுத்தா்கள் 3 போ் மற்றும் 17 அமலாக்கப் பிரிவு போலீசார் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 

    அந்த பணியிடங்களில் மண்டபத்துக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், ராமநாதபுரம் வடக்குப்பிரிவு தெற்குப் பிரிவுக்கு தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு போலீசார், ராமேசுவரம் பிரிவுக்கு தலா ஒரு இன்ஸ்பெக்டர், போலீசார் என்று தற்போது 7 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். 

    அவா்களுக்கு பொதுவாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரோந்து படகும் வழங்கப்பட்டுள்ளது.ரோந்துப்படகு மூலம் தற்போது தடை காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்கிறாா்களா? நாட்டுப் படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மீன்பிடி வலைகளை பயன்படுத்துகின்றனரா? என கடலோர அமலாக்கப் பிரிவினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
    விதி மீறல் இருந்தால் அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்வார்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×