search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பின்னலாடை தொழில்துறை பிரச்சினையை பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்வேன் அண்ணாமலை உறுதி

    தொழில்நிலை குறித்த விவரங்களை அண்ணாமலை விவரமாக கேட்டறிந்தார்.
    திருப்பூர்:

    கோவை வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க 'போரம்' நிர்வாகிகள் குமார், சக்திவேல், சிவா, பிரதீப் ஆகியோர் சந்தித்து நூல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பேசினர்.

    இதுகுறித்து குமார் கூறியதாவது:-

    தொழில்நிலை குறித்த விவரங்களை அண்ணாமலை விவரமாக கேட்டறிந்தார். 

    துணி மற்றும் ஆடை உற்பத்தியாளரையும், புதிய கமிட்டியில் உறுப்பினராக சேர்க்க உரிய முயற்சி எடுக்கப்படும். ஜவுளித்தொழில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது. 

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி இந்தியாவின் ஏற்றுமதியை 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த உறுதுணையாக இருப்பேன். பின்னலாடை தொழில்துறை சந்தித்துள்ள நூல் விலை உயர்வு  பிரச்சினைைய பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அனைவருக்குமான வளர்ச்சியே  மத்திய அரசின் தாரக மந்திரம். தொழில்துறையினர், இடையூறுகளை களைந்து, வளர்ச்சிப்பாதையில் பயணிக்க, தொழில்துறையினரின் கருத்துக்கள் அவசியம்.

    ஜவுளி உற்பத்தி சங்கிலியில்அனைவரும் பயன்பெறும் வகையில், நல்லதொரு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று உறுதி அளித்துள்ளார். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×