search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

    விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

    விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    திருச்சி:

    முசிறி முருகு விநாயகர் நகரிலுள்ள விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்டு, மகா பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து முருக விநாயகருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது . சர்வசாதகம் சிவஸ்ரீ மாணிக்க சுந்தர சிவாச்சாரியார் அனைத்து பூஜைகளையும்  செய்திருந்தார்.

    இதே போல் முசிறி அடுத்த வெள்ளூர் செல்லியம்மன் படையாட்சி அம்மன், மலையாளி, மாசி பெரியண்ணசாமி, திருக்கோயில்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, சோம கும்ப பூஜை, சூரிய பூஜை, மண்டப ஆராதனை பூதசுத்தி, வேதிகார்ச்சனை, அக்னி காரியம், நாடி சந்தானம் மகா பூர்ணாஹுதி நடந்தது.

    பின்னர் சடையாட்சி அம்மன், மாசி பெரியண்ணசாமி, கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து செல்லாயி அம்மன் மலையாளி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     இரவு செல்லியம்மன் படையாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாலப்பட்டி, ஆணைபட்டி, திரணியாம்பட்டி பசுக்காரன்பட்டி செல்லாயி கோவில் மேடு கீழ வெள்ளூர், மேலவெள்ள சாணாரபாளையம் உட்பட பல கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கும்பாபிஷகத்தில் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×