search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    17-ந்தேதிக்குள் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு

    உடுமலை தாலுகாவில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாகவும், விரைவாகவும் அகற்ற அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், மாவட்ட அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உடுமலை தாலுகாவில், பாலாற்றை ஆக்கிரமித்திருந்த தென்னை மரங்கள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. 

    மேலும் செங்குளம் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 24 வீடுகள், வாளவாடி பகுதியிலுள்ள குளங்களின் ஆக்கிரமிப்புகள் என வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடுமலை தாலுகாவில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாகவும், விரைவாகவும் அகற்ற அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 17-ந்தேதி வரை எலையமுத்தூர், ஜே.என்., பாளையம், வாளவாடி, வலையபாளையம் கிராமங்களில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் ஆய்வாளர்கள், நில அளவைத்துறை ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ., க்கள் மற்றும் கிராம உதவியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    நாள் தோறும் இப்பணியில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள் குழு மற்றும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

    அனைத்துப்பகுதிகளிலும் குளம், குட்டை, ஆறு மற்றும் ஓடைகளை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும்அந்தந்த பகுதியிலுள்ள பொதுப்பணித்துறை, மின் வாரியம், போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளையும் இப்பணிகளில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நீதிமன்ற உத்தரவு படி நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

    இப்பணிகளை விரைந்து முடிக்கும் வகையில்நில அளவைத்துறை அலுவலர்களைக்கொண்டு, கிராம ஆவணங்களின் அடிப்படையில் அளவீடு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றும் வகையில் வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர்தொடர்ந்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றவும், புல எண் வாரியாக புகைப்படம்  மற்றும் வண்ண வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பணியில் நியமிக்கப்பட்ட அலுவலர்கள், நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி வருகின்றனர். 

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×