search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சில் படிகட்டில்தொங்கியபடி பயணம் செய்த மாணவிகளை படத்தில் காணலாம்.
    X
    அரசு பஸ்சில் படிகட்டில்தொங்கியபடி பயணம் செய்த மாணவிகளை படத்தில் காணலாம்.

    ஆபத்தை உணராமல் படிகட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவிகள் பயணம்

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள், அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 

    இந்த கல்லூரியில் பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ, பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், புள்ளியல், காட்சி தொடர்பு ஊடகவியல்உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரியின் படித்து வருகின்றனர். மேலும் காரிமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்கு மேல் தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி அமைந்துள்ளது.

     ஒரு சில குறிப்பிட்ட நகரப் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், அந்த ஒரு சில பேருந்துகளில் முண்டியடித்து க்கொண்டு மாணவிகள் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
    கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

    இதனால் கல்லூரி முடிந்து தருமபுரி செல்லும் பேருந்து ஒன்றில் கனரக வாகனங்களுக்கு மத்தியில் பேருந்து படிக்கட்டியில் தொங்கியபடி மாணவிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற பேருந்தில் மாணவிகள் தொங்கியபடி சென்ற காட்சியை செல்போனில்  படம்பிடித்த நபர் ஒருவர் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    Next Story
    ×