
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
தஞ்சை அருகே களிமேட்டில் அப்பர் மடத்தின் தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் களிமேடு கிராமத்துக்கு வந்தார். விபத்தில் இறந்த 11 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.