search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுாி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  10-ம் வகுப்பு மாணவிகள் ஆர்வத்துடன்தேர்வு எழுதிய போது எடுத்த படம்
    X
    தருமபுாி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் ஆர்வத்துடன்தேர்வு எழுதிய போது எடுத்த படம்

    இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தருமபுரி மாவட்டத்தில் 23,788 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

    தருமபுரி மாவட்டத்தில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதனை 23,788 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு பணிகளில் 2127 பேர் ஈடுபடுகின்றனர்.
    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் கொரோனா ெதாற்று கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. 

    தருமபுரி மாவட்டத்திலுள்ள 218 அரசு பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி 5 உண்டு உறைவிடப்பள்ளி, 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுயநிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    இதில் 11,895 மாணவர்கள்,11033 மாணவிகள், என மொத்தம் 22,928 மாணவ, மாணவிகளும் 860 தனித்தேர்வர்களும்23,788 பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

    இத்தேர்வு பணிகளில் 1623 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 93 முதன்மை கண்காணிப்பாளர்களும், 99 துறை அலுவலர்களும், 102 பறக்கும் படைகளும், 29 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உதவிக்காக 155 சொல்வதை எழுதுபவர்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பு அவர்களும் என மொத்தம் 2127 அலுவலர்கள், பணியாளர்கள், ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×