என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாலையின் நடுவே செடிகள் நடும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
Byமாலை மலர்5 May 2022 3:35 PM IST (Updated: 5 May 2022 3:35 PM IST)
சாலையின் நடுவே செடிகள் நடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர் பகுதிகளில் பசுமையாக மாற்றுவதற்கு சாலையின் நடுவே மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருவதற்கான திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் அய்யப்பன் கோவில் பகுதி சாலையின் நடுவே மாநகராட்சி தரப்பில் சாலைகளை உடைத்து புதிதாக செடிகளை நடுவதற்கு பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செடிகளை நடுவதற்கு மூலமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் மூலமாக வெளியேற்றப்படும் கரும்புகையை சாலையோரம் வைக்கப்பட்டுள்ள செடிகள் உள்வாங்கி பொதுமக்களுக்கு சற்று தூய்மையான காற்றை தரும் என்ற அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற மாநகரில் பல்வேறு இடங்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது. அதனால் சாலைகளின் நடுவே ரோடுகள் உடைக்கப்பட்டு கிடைக்கிறது. இதனால் சாலை பயணிகள் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதி அடைகின்ற நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது;
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர தூய்மையாக்க பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது அதில் ஒன்றாக சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்து செடிகளை உருவாக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
அய்யப்பன் கோவில் பகுதி சாலையின் நடுவில் உடைக்கப்பட்டு அந்த கற்கள் அனைத்தும் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு புறமும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே மாநகராட்சி நிர்வாகம் இந்த ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் உருவாகும் சாலைகளின் நடுவில் செடி நடும் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story
×