search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் விரைவில் இந்த பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    கருமத்தம்பட்டி,  
    கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதி கோவை, திருப்பூர், பல்லடம், அன்னூர் சந்திப்பு சாலை பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகவும் இருந்து வருகிறது.
     
    மேலும் சோமனூர், கிட்டாம்பாளையம், தொட்டிய பாளையம், சேடபாளையம், கணியூர் போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதிக்கு பனியன் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள்  மற்றும் பொது மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் பயணித்து வருகின்றனர்.
    இந்த நிலையில் பல ஆண்டுகளாக கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
     
    இதுகுறித்து அந்த பகுதி  பொதுமக்கள்  கூறும்போது,
    கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மற்றும் கோவை, அன்னூர், பல்லடம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும், பணி நிமித்தமாகவும் சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடும் இடமாக கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதி உள்ளது.
     
    இப்பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி எதுவும் இல்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.  அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக உள்ள இந்தப் பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லாதது பெரும் வேதனை அளிக்கிறது.
    குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் விரைவில் இந்த பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×