search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி அருகே 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யத போது எடுத்தப்படம்.
    X
    வாணியம்பாடி அருகே 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யத போது எடுத்தப்படம்.

    வாணியம்பாடி அருகே 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    வாணியம்பாடி அருகே 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நாளுக்கு நாள் ரேசன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. 

    கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த மாவட்டத்தில் இருந்து 50 டன் வெளிமாநிலங்களுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர், கேத்தாண்டப்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையும், உணவு பாதுகாப்புத் துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அரிசி கடத்தல் குறைந்ததாக தெரியவில்லை.

    நேற்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சோம நாயக்கன்பட்டி ெரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 22 மூட்டைகளில் சுமார் 1,100  கிலோ ரேசன் அரிசியை, குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×