search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் மின் வினியோகம் பாதிப்பு
    X
    மேட்டுப்பாளையத்தில் மின் வினியோகம் பாதிப்பு

    சூறாவளி காற்றுடன் மழை: மேட்டுப்பாளையத்தில் மின் வினியோகம் பாதிப்பு

    மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.
    சிறுமுகை,  
     மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னல்,  சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரம் நீடித்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. 
     
    காரமடை ரோட்டில் பாரதிநகர் செல்லும் வழியில் சாலையோரம் இருந்த பெரிய வேப்பமரம்  வேரோடு சாய்ந்து டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது.  இதில் டிரான்ஸ்பார்மர் முழுமையாக சேதமடைந்து மின்சார ஒயர்கள் துண்டிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. 
    அதே பகுதியில் மெயின் ரோட்டில் வணிக வளாகத்தின் முன்புறம் இருந்த பழமையான  வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த    ஆம்னி கார் அப்பளம் போல் நொறுங்கியது. கே.கே நகரில் கூட்டுறவு வங்கியின் அருகில் இருந்த மரம் அடியோடு சாய்ந்தது. 
    தாசம்பாளையத்தில்  மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்து மின் ஒயர்கள் அறுந்து விழுந்தது. அதே போல அன்னூர் ரோட்டில் அடுத்தடுத்து 4  மரங்கள்  சாலைகளில் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து முடங்கியது. 
     
    இதையடுத்து  போலீசார் வாகனங்களை வேறு வழியில் திருப்பி அனுப்பி வைத்தனர். ஆங்காங்கே கடைகளின் பெயர் பலகைளும், விளம்பரப் பலகைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டன. 
    சாலையில் தண்ணீர்  ஆறு போல் ஓடியதால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சீரமைப்புப் பணியில் தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறாக  சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர். 
    மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது. இரு ப்பினும் பெரும்பாலான பகுதிகளுக்கு  மின்வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களை  வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை  துரிதப்ப டுத்தினர். 

    Next Story
    ×