search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    வருகிற 9ந்தேதி ரெயில்வே தேர்வு: வெளி மாநில தேர்வு மையங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?

    அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த தேர்வில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி பிற மாநில விண்ணப்பத்தாரர்களுக்கும் சொந்த மாநிலத்தில் இல்லாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வீ.கே.புதூர்:

    ரெயில்வே தேர்வு வாரியம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் சுமார் 24 ஆயிரத்து 649 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது.

    இதற்கு நாடு முழுவதில் இருந்தும் 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதன் முதல்நிலை கணினி வழித்தேர்வு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்டது.

    இதில் தேர்வான தமிழர்கள் ஏராளமானோருக்கு இரண்டாம்‌ நிலை தேர்வுகள் தமிழ்நாட்டில் மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

    கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கர்நாடகாவில் உள்ள மங்களூரு பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, பெல்காம், ஆந்திராவில் திருப்பதி நெல்லூர், குண்டூர் விஜய வாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏராளமான தமிழர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த தேர்வில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி பிற மாநில விண்ணப்பத்தாரர்களுக்கும் சொந்த மாநிலத்தில் இல்லாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 9ந்தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்வுக்காக, 8ந்தேதி மதியம் நெல்லையில் இருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு ரெயிலும்,

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு, வழியாக மங்களூர் வரை ஒரு சிறப்பு ரெயிலும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு சிறப்பு ரெயில்களும் அதிகாலை 5.30 மணிக்குள் தேர்வு மையங்களை சென்றடையும் வகையில் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×