search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தி முனையில் வழிப்பறி

    மண்ணச்சநல்லூரில் லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில் உள்ள அத்தாணி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் முருகானந்தம் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் முருகானந்தத்தை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து முருகானந்தம் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்  முருகானந்தத்தை வழிமறித்து

    அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு, லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிய வாலிபர் உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முருகானந்தம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் வாலிபர் முருகானந்தத்திடம் இருந்து கத்திமுனையில் பறிக்கப்பட்ட ஏடிஎம் கார்ட் மூலம் அந்தப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் 13 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது.  

    அதனடிப்படையில் ஏடிஎம் மிஷின் அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில். நொச்சியம் பகுதியை சேர்ந்த  விக்னேஸ்வரன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 21) மற்றும்  

    மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் ஆகிய 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.  அவர்களிடம் இருந்து கத்தி, பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×